யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமரா ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பயணத் தடை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கமைய யாழ்ப்பாணத்தில் பயணக் கட்டுப்பாட்டை மீறுவோரை கண்காணிக்க விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள் படையணி, டிரோன் கமரா பிரிவு ஆகியன ஊடாக அங்கு விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இந்த கண்காணிப்பு பணி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.