ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 50 ஆயிரம் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தன.
விசேட விமானத்தின் மூலம் நேற்று இரவு 10.40 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இவை பாதுகாப்பாக குளிரூட்சி வசதிகளுடன் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன வாகனத்தின் ஊடாக கொழும்பிலுள்ள பிரதான தடுப்பூசி களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மே 4 ஆம் திகதி 15 ஆயிரம் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.