இலங்கையில் வியாழக்கிழமை மேலும் 2,572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 174,849 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே நாட்டில் வியாழக்கிழமை தொற்றுக்குள்ளான மேலும் 1,411 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 143,789 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 29,762 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு நாட்டில் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேரின் மரணம் பதிவாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் புதன்கிழமை மேல் மாகாணத்தில், 573 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 530 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 128 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 257 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.