
திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் குறித்த வீட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 லெலனைற் குச்சிகள், சேவா நூல் என்பன மீட்கப்பட்டுள்ளன.
நிலாவெளியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும் இறக்கக்கண்டியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெடிபொருட்களைக் கொண்டுவந்த நோக்கம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.