January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்துக்கு சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சபைப்படுத்திய பின்னர், இம்மாதம் 20 ஆம் திகதி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்துக்கு நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டார்.

இன்று முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் தனது சான்றுரைப்படுத்தலை வழங்கியிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.