‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகளின் 50,000 டோஸ் இன்று இரவு (27) இலங்கை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியாக 15,000 டோஸ்கள் மே மாதம் 4ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த நிலையில், இதில் 14,984 தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொவிட் தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார்.
அதேபோல், மே 18 அன்று அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மே 25 ஆம் திகதி ரஷ்ய தடுப்பூசியின் 185,000 டோஸ் இலங்கை வரும் என உறுதிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, இலங்கையில் நேற்று (26) கோவிஷீல்ட் தடுப்பூசியின் 699 டோஸும், சினோபார்ம் தடுப்பூசியின் 3,646 டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு நாட்டில் நேற்று (26) வரை 14,61696 பேருக்கு தடுப்புசிகளின் முதலாவது டோஸும், 343976 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்படடுள்ளது.
நாட்டில் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்களின் மொத்த தொகையில் 1.6% மானவர்களுக்கே கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.