May 29, 2025 0:10:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமாக வாகனமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது!

சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவர் விசேட அதிரடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மார்க்ரட் சில்வா இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கொழும்பு 13 பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து 56 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேக நபரிடம் வாகனத்துக்கான எந்தவொரு சட்டபூர்வமான ஆவணங்களும் இருக்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.