May 30, 2025 10:52:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் ஒருதொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டாவது டோஸ்களுக்காக ஒதுக்கப்பபட்டுள்ளன”

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி டோஸ்களில் ஒரு தொகுதியை இரண்டாவது டோஸ்களை வழங்குவதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணி பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சீனவினால் இரண்டாவது கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசி டோஸ்கள் நேற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றில் 375,000 தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகுதியாக இருக்கும் 125,000 டோஸ்களை காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.