இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இதுவரை பதில் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் பதவி காலம் நிறைவடைந்ததன் காரணமாக இவரை புதிய சட்டமா அதிபராக தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற பேரவைக்கு முன்மொழிந்தார்.
அதற்கமைய, பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்ற பேரவை இணக்கம் வெளியிட்டது.
இவர் இலங்கையின் சட்டமா அதிபராக பதவி வகிக்கும் 3 ஆவது தமிழரும், 4 வது சிறுபான்மையினருமாவார்.
சஞ்சய் ராஜரட்ணம் 2019 ஒக்டோபரில் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.