January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதி தாழிறக்கம்; வாகன போக்குவரத்திற்கு தடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஊடாக செல்லும் பிரதான வீதியின் நிலம் தாழிறங்கியுள்ளது.

6 அடி ஆழத்திற்கு வீதி தாழிறங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தாழிறங்கிய பகுதியை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படும் வரை நீர்த்தேக்கத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் வாகன போக்குவரத்திற்கு அனுமதியில்லை என அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த அனர்த்தம் தொடர்பில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உரிய நடவடிக்கை எடுப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதனால் கொத்மலை நீர்த்தேக்க அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என நீர்த்தேக்க பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.