காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடி, தொற்று நீக்கம் செய்வதற்கும் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.