கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் காயமடைந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் நேற்று (25) காலை மீண்டும் தீப்பற்றியதுடன் அதிலிருந்த இரசாயனம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த கப்பலின் பணிக்குழாமைச் சேர்ந்த இரண்டு பேர் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது குறித்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பி சி ஆர் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
பின்னர் அவர்கள் இருவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளுக்கு அமைய, காயமடைந்த இந்திய பிரஜைகள் இருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது இந்திய திரிபு வைரஸா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.