
வவுனியா நேற்று வீசிய பலத்த காற்றினால் ஒலுமடுப் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி தோட்டம் முழுமையாக அழிவடைந்துள்ளது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன்போது பல பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இருந்த 600 ற்கும் மேற்ப்பட்ட பப்பாசி மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
இதனால் பல இலட்சரூபாய்அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.