May 3, 2025 21:53:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை மூடுவதற்கும், அங்கிருந்த பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணிபுரிந்த 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த 10 ஊழியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ள பாராளுமன்ற படைக்கலச் சேவிதர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.