November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறைந்த செலவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய ‘கார்ட்போர்ட் சவப்பெட்டி’ அறிமுகம்!

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு தெஹிவளை- கல்கிசை மாநகர சபையினால் சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத விதத்தில் சவப்பெட்டியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சவப்பெட்டி கார்ட்போர்ட் அட்டைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அத்திட்டிய மலர்சாலையில் வைத்து இது அறிமுகப்படுத்தப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் அனுமதியுடன் தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் முதல் முறையாக கொவிட் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் உடல் கொஹுவல பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த செயன்முறை மூலம் உடல்களை அடக்கம் செய்வதற்கு 10,000 ரூபா போதுமானது என தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மேயர் ஸ்டான்லி டயஸ் தெரிவித்தார்.

அத்துடன், தற்சமயம் ஒவ்வொரு குடும்பமும் கொரோனா மரணமொன்றுக்கு 40,000 ரூபாவுக்கு அதிகமாக சவப்பெட்டிகளுக்கு செலவு செய்ய நேர்ந்துள்ளதாகவும், அதனை குறைக்கவும் சுற்று சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும் இவ்வாறு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.