
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான தற்காலிக தடையை ஜூன் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா சென்று வந்தவர்களுக்கும் இந்திய பயணிகளுக்கும் தொடர்ந்து பயணத்தடை அமுலில் இருக்கும் என இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளுக்கும் தடை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த அரசாங்கம் அந்தத் தடையை முன்னர் அறிவித்ததை போன்று மே 31 நள்ளிரவு வரையில் தொடர்வதற்கும், அதன்பின்னர் தடையை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.