இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 686 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறையாக முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணித்த 42 முச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் பயணித்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை மேல்மகாணத்தின் எல்லை பகுதிகளில் சேதனைச் சாவடிகளில் கடமை புரிந்துவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நடமாடும் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்பு பிரிவும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி 2021 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 14,179 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.