
அடுத்த சுற்றில் அரச அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு உறுதி அளித்துள்ளது.
எனவே, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள் மற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் எந்த ஒரு தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு கேட்டு கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள முன்னுரிமை பட்டியலுக்கு அமைய தடுப்பூசிகள் வந்தவுடன் மேற்கண்ட குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த சுற்றில் தடுப்பூசி வழங்குவது குறித்து ஜனாதிபதி, மற்றும் பிரதமர் கவனம் செலுத்திவருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரச அதிகாரிகளின் சேவை நாட்டிற்கு மிகவும் அவசியம் என்பதால் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் எனவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் முறைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கமும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.