இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 168,980 ஆகி அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 1,228 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 141,175 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 26,562 பேர் நாட்டில் பல கொரோனா வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, 1,243 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே 14 மில்லியன் “சினோபார்ம்” தடுப்பூசிகளையும் ஒரு மில்லியன் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகளையும் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வருட நிறைவிற்கு முன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60- 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.