January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுக கப்பல் தீயணைப்பு முயற்சிகளுக்கு இந்திய கடற்படையும் உதவ முன்வந்துள்ளது

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலைக் கட்டுப்படுத்த இந்திய கடற்படை முன்வந்துள்ளது.

‘எம்வி- எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலில் இன்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து விழுந்த இரசாயன கொள்கலன்கள் கடலில் மிதப்பதாகவும் கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த கொள்கலன்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளுக்கு ஒதுங்க வாய்ப்பு இருப்பதாகவும், அவற்றை பொதுமக்கள் அவதானித்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கப்பல் தீ விபத்தைக் கட்டுப்படுத்த இந்தியா தீயணைப்புப் படகு உட்பட பல்வேறு உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளன.