நாட்டில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அமெரிக்காவினால் 13 மில்லியன் ரூபா பெறுமதியான பி.சி.ஆர் பரிசோதனைக் கருவிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த 4,700 பி.சி.ஆர் பரிசோதனைக் கருவிகள், அமெரிக்க தூதரகம் சார்பில் அமெரிக்காவின் பசுபிக் கடற்படை குழுவினால், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மனிதாபிமான நன்கொடை மற்றும் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந் நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சுகாதார அமைச்சின் செயலாளர் பொது நிபுணர் வைத்தியர் மேஜர் சஞ்சீவா முனசிங்க, அரச மருந்துகள் வழங்கல் மற்றும் ஒழுங்குமறை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.