November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 நடமாடும் ஒக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 நடமாடும் ஒக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் 19 தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சைகளை துரிதப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 நடமாடும் மருத்துவ ஒக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் வீதம் 25 மாவட்டங்களுக்கும் 2500 இயந்திரங்களை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மருத்துவமனைகளுக்கு சிலின்டர்களில் ஒக்ஸிஜன் வழங்கும் தேவையை குறைத்துக்கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 25 மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் உபகரணங்களுடன் கூடிய விசேட உயர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படவுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தூர பிரதேசங்களில் அமைந்துள்ள 15 மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஸ்தாபிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தடையின்றிய மருத்துவ ஒக்ஸிஜன் விநியோகத்தை பராமரிக்க மாதாந்தம் 120,000 லீட்டர் திரவ ஒட்ஸிஜனை இறக்குமதி செய்யவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.