இலங்கையின் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பேஸ்புக் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த தினங்களில் தன்னைச் சந்தித்தவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.