
இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியே, இந்த புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இராஜாங்க செயலகம் வெளியிட்டுள்ள பயண வழிகாட்டலில், ‘அமெரிக்கர்கள் இலங்கைக்கு பயணிக்க வேண்டாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் இலங்கையின் சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தீவிரமாகப் பரவுவதாக அமெரிக்க தொற்று நோய் தடுப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.