கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ள ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அந்தக் கப்பலில் இருந்து 8 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கப்பலுக்குள் சிக்கியிருந்த 25 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுடன் வந்த குறித்த கப்பல் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் வட மேற்கு பகுதியில் 9.5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த போது அதில் கப்பலில் தீ பரவியது.
இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த கடற்படையினரும், சமூத்திரவியல் பாதுகாப்புப் பிரிவினரும் கடந்த 4 நாட்களாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக விமானப் படையின் ஹெலிக்கப்டர்களின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை கப்பலில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.