November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் சட்ட சீர்திருத்த பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அணுகுமுறை பாராட்டுக்குரியது என்கிறது பஃப்ரெல்

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைக்கு பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும், தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அணுகுமுறை பாராட்டுக்குரியது என்று பஃப்ரெல் அமைப்பின் இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப தேர்தல் கட்டமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமமான போட்டியை உறுதி செய்வதற்காக அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய புதிய சட்ட விதிகளை வகுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கமான வாக்குரிமையை பயன்படுத்துவது தடையின்றி அல்லது செல்வாக்கின்றி பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் தேசிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்கள் கருத்துக்களையும் திட்டங்களையும் பாஃப்ரெலுக்கு சமர்ப்பிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தேர்தல் சீர்திருத்தத்திற்கான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.