கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதை எந்தவொரு மருத்துவமனையின் நிர்வாகமும் நிராகரிக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசெல குணவர்தன தெரிவித்தார்.
‘1990’ அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வரப்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும்,வைத்தியசாலைகளுக்கு அழைத்து வரப்படுகின்ற கொரோனா தொற்றாளர்கள் 15 – 30 நிமிடங்களுக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் நோயாளியின் நிலைமையை கருத்தில் கொண்டு வேறு மருத்துவமனை அல்லது இடைநிலை பராமரிப்பு மையத்திற்கு மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்,மருத்துவ உதவி கோரி கொண்டு வரப்படும் எந்தவொரு நோயாளியையும் அனுமதிப்பதை எந்தவொரு மருத்துவமனையும் நிராகரிக்கக்கூடாது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்தினார்.