October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் இன்று (24) இதுவரையில் 2,970 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 167,171 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு  கொரோனா தொற்றுக்குள்ளான 26,537 பேர் நாட்டின் பல கொரோனா வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இன்று (24) கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 1,296 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 139,947 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக காலி மாவட்டத்தைச் சேர்ந்த 103 வயது பெண்மணி நேற்று உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த மிக வயதான நபர் இவர் ஆவார்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் பதிவான மொத்த இறப்புகளில் ஏப்ரல் 15 முதல் இதுவரை 558 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, மொத்த இறப்புகளின் 46.1% மானவை புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில் நாட்டில் 67,912 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.