January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் புதிய முடிவு!

வாகனங்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பிரதமருடனான அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை மற்றும் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செலவு குறைந்த விதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அல்லது இறக்குமதி செய்யும் திட்டத்தை தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.