கொரோனா பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு 5.5 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பெய்ன் அறிவித்துள்ளார்.
🇦🇺 is partnering with Bangladesh, Nepal and Sri Lanka in their response to increasing COVID-19 cases. We will provide $17.5m in funding for emergency relief with support to be delivered by trusted on-the-ground partners. 🇧🇩🇳🇵🇱🇰 @dfat @ZedSeselja Read more: https://t.co/tJIqk33QcP
— Marise Payne (@MarisePayne) May 21, 2021
இது குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, “இலங்கையின் தற்போதைய நிலைமையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அண்டைய நாடான இலங்கைக்கு எங்கள் ஆதரவை வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
🇦🇺 is providing an additional $5.5m to assist 🇱🇰’s COVID-19 response, as part of an assistance package to support the Indian Ocean region. 🇦🇺 stands ready to support our 🇱🇰 neighbours to contain the spread of COVID-19 and manage threats to regional health security in the future https://t.co/FrB2bZVhS6
— Australia in Sri Lanka (@AusHCSriLanka) May 21, 2021
அவுஸ்திரேலியா அரசு ஏற்கனவே 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலியா கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக 11.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இது இலங்கை மதிப்பில் 1,787 மில்லியன் ரூபாய் ஆகும்.
அவசரகால நிவாரணத்திற்காக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையே, 17.5 மில்லியன் டொலர் நிதியுதவியை அவுஸ்திரேலிய அரசு பகிர்ந்தளிக்க உள்ளது.