இலங்கையில் கொரோனா கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேலும் 4 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இரத்தினப்புரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் டயகம பொலிஸ் பிரிவு, சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு மற்றும் சந்திரிகாமம் தோட்டத்தின் என்எல்டிபி விலங்குகள் பண்ணை ஆகியன முடக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பொலிஸ் பிரிவு, குருவிட்ட கிராம சேவகர் பிரிவு, தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி ஆகியனவும், காலி மாவட்டத்தின் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவும் ஊரவத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவும், இரியவெட்டிய கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன.