இலங்கையில் அத்தியாவசிய பொருள் கொள்வனவு மற்றும் சேவைகள் குறித்த விசாரணைகளுக்காக அரசாங்கம் ‘1965’ என்ற தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1965 என்ற விசேட தொலைபேசி இலக்கம் இன்று முதல் செயற்பாட்டில் இருக்கும் என்று பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்த தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.