இலங்கைக்கு ‘கரும் பூஞ்சை’ என்பது ஒரு புதிய நோயல்ல என்று இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரும் பூஞ்சை தொற்று தொடர்பாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை தொடர்பான பீடத்தின் தலைவர், டாக்டர் பிரிமலி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு முதல் ‘கரும் பூஞ்சை’ தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது ‘முகொர்மைகோசிஸ்’ என அழைக்கப்பட்டதாகவும் இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ‘கரும் பூஞ்சை’ தொற்றுடன் 2019 ஆம் ஆண்டு 42 பேரும், 2020 ஆம் ஆண்டு 24 பேரும் 2021 ஆம் ஆண்டு 24 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரையில் கொரோனா மற்றும் கரும் பூஞ்சை என இரண்டு தொற்றுகளும் ஏற்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் டாக்டர் பிரிமலி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
‘கரும் பூஞ்சை’ தொற்று வளர்வதற்குரிய சுற்றுச்சூழல் காரணிகள் இலங்கை மண்ணில் காணப்படுவதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு தொற்றும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.