இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இதேநேரம், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளை, இம்மாதம் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதிகளில் வெளியே செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களைக் கொள்வனவு செய்ய ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் மருந்தகங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.