July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை

இலங்கையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செலவு குறைந்த விதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் தமக்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு வாகனங்களை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாகனங்களைக் கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், வரி விலக்களிக்கப்பட்ட வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதை ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தி இருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, 50 அம்புலன்ஸ்களையும், 50 தண்ணீர் பவுஸர்களையும், 50 ஜீப் வண்டிகளையும் இறக்குமதி செய்ய நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.