January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸின் மரணத்தில் சந்தேகம்; சாரதி உட்பட மூவர் கைது!

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் விபத்து ஒன்று காரணமாக நேற்று உயிரிழந்தார்.

எலுவங்குளம் பிரதேசத்தில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் நீராடிவிட்டு பின்பகுதி திறந்த டிராக் வண்டி ஒன்றில் வீடு திரும்பும் போது, வண்டியில் இருந்து வீதியில் விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், புத்தளம் மற்றும் வனாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் வண்டி சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்படும் போது, அவர்கள் போதையில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பாக நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.