
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் பிரதம குருவும், சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஶ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக அவர் இன்று அதிகாலை காலமாகியுள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
சிவஸ்ரீ சம்புஹேஸ்வரக் குருக்கள்-மீனாம்பாள் அம்மா தம்பதியரின் புதல்வரான மஹேஸ்வரக் குருக்கள், இலங்கையின் இந்துமத குருபீடத்தின் தலைமகன் என்று அழைக்கப்பட்டார்.
இவர் நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயத்தினதும், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தினதும் பிரதம குருவாக பணியாற்றியுள்ளார்.