
இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 32 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்த மரணங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் மே 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றவை என்று சுகாதார பணிப்பாளர் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தக் காலப்பகுதியில் கொரோனாவால் 600 ற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த எண்ணிக்கையுடன் மேலும் 32 மரணங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1210 ஆக உயர்வடைந்துள்ளது.
இவற்றில் கடந்த 3 வார காலப்பகுதியில் மாத்திரம் 550 வரையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.