January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘கருப்பு பூஞ்சை’ நோய் இல்லை; அரசாங்கம் மறுப்பு

Covid Related Images

இலங்கையில் ‘கருப்பு பூஞ்சை’ நோய் கண்டறியப்பட்டது என்று வெளியான தகவலில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாறையில் உள்ள ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இந்த செய்தி தவறானது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் காசநோய் நோயாளி என்று தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, அவர் காச நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

அந்த நபருக்கு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அது கருப்பு பூஞ்சை அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.