ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய நாட்டில் 50 ஆயுர்வேத மருத்துவமனைகளை உடனடியாக கொவிட் இடை நிலை சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
50 ஆயுர்வேத மருத்துவமனைகளை கொவிட் இடை நிலை சிகிச்சை மையங்களாக உள்வாங்கப்படுவதன் மூலம் , 3,500 மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவமனை வளங்கள் இணைத்து கொள்ளப்பட உள்ளது.
அத்தோடு, ஆயுர்வேத மருத்துவமனைகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொவிட் சிகிச்சை குறித்த முறையான பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களுக்கான தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொவிட் சிகிச்சை தொடர்பான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை விரைவாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சத்தான உணவு மற்றும் பானங்கள் வழங்குவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.