நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையை கட்டுப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முடக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவு கொவிட் பரவலை கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த அது போதாது என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைவரும் சிந்தித்து செயற்படுவதுடன், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறைந்தது இரண்டு வாரங்களுக்கு நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.