November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக இதுவரையில் 138 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது”

இலங்கையில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் இதுவரையில் அரசாங்கம் 138 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய நிலைமையில் நாட்டை முடக்கும் போது நாளொன்றுக்கு 140 கோடி ரூபா தேசிய வருவாயில் நட்டம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், வங்கிக்கடன் தளர்வுகள் உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக்கொடுக்கவும், தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அத்துடன் கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கொடுப்பனவுகளை வழங்கவும் என 138 பில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளதால் அதற்கும் மேலதிகமாக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமையில் நாட்டினை முடக்க வேண்டும் எனவும், மக்களை வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுத்தாது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிகாட்டியுள்ளார்.

இவ்வாறு நாட்டினை ஒரு நாள் முடக்குவதாயின் 140 கோடி ரூபா தேசிய வருவாயில் நட்டம் ஏற்படுகின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையில் இதுபோன்ற சிக்கல்கள் நெருக்கடிகள் ஏற்படும் என்றால் இதன் தாக்கம் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வெளிப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.