January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெற்ற கப்பல் தீ விபத்து; ஆராய்வதற்கு டச்சு வல்லுநர்கள் குழு வருகை

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் சிங்கப்பூருக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து விசாரணை நடத்த டச்சு வல்லுநர்கள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.

நேற்று இரவு (22)இலங்கைக்கு வந்த குழுவினர் தீ பிடித்த கப்பலின் இருப்பிடத்தை பார்வையிட்டு விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த தீ விபத்து காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆராய்வதற்காக குறித்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.