எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அவரின் மனைவி ஜலனி பிரேமதாஸவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று அறிகுறிகள் தென்பட்ட நிலையில் நேற்றைய தினத்தில் தனது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தானும் பிசிஆர் பரிசோதனையை செய்துகொண்டதாகவும், இதன்போது தனக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
Yesterday, my wife was admitted to hospital with symptoms of Covid-19. She subsequently tested positive having done a PCR.
Following Health Guidelines, I did a PCR as well and was informed a short while ago that I too, have tested positive.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 23, 2021
தொற்று உறுதியான நிலையில் இருவரும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.