இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு தெரிவித்துள்ளது.
இவற்றில் மே 16 ஆம் திகதி 4 மரணங்களும், மே 17 ஆம் திகதி 4 மரணங்களும், மே 18 ஆம் திகதி 3 மரணங்களும், மே 19 ஆம் திகதி 8 மரணங்களும், மே 20 ஆம் திகதி 15 மரணங்களும், மே 21 ஆம் திகதி 10 மரணங்களும், மே 22 ஆம் திகதி 2 மரணங்களும், பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,178 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 600 ற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றால் ஏற்படும் நிமோனியா நிலைக்கு சென்றே மரணித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் இதுவரையில் 161,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 2906 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றியோரின் 126,995 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளிலும், கொவிட் சிகிச்சை நிலையங்களிலும் 33,115 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.