சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர் பலகைக்கு பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தை கடந்த 19 ஆம் திகதி இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜெங் கோங் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் விபரங்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையிலேயே, குறித்த பெயர் பலகையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.