October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் திட்டங்களை பிரதமர் இணையவழியில் ஆரம்பித்து வைத்தார்

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் மூன்று திட்டங்களை இணையவழியில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ நீர் வழங்கல் திட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியன நேற்று பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

குருநாகல், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 377 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நன்மையடைவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூய்மையான குடிநீர் இல்லாததால் வட மேல் மாகாண மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரச்சினை ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

 

This slideshow requires JavaScript.