July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றினால் 1,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 5 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், 300 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தேசிய தொற்று நோய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு இடையில் கொரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக கொரோனா தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது மிக முக்கியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சில நாடுகளில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, பெற்றோர் சிறுவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.