Photo: Facebook/ Nissanka Senadhipathi
இலங்கையின் காலி துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கில் இருந்து ‘அவன்கார்ட்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 8 பேர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த வழக்கின் தீர்ப்பு விசேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஆதித்ய பட்டபெதிகே, மஞ்சுல திலகரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய ஆகியோரினால் இன்று அறிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் காலி துறைமுகத்தை அண்மித்த கடல் பகுதியில் அவன்கார்ட் என்ற கப்பலுக்குள் இருந்து 816 ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.
அவை சட்டவிரோதமான முறையில் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் அந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இதன்போது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆயுதக் களஞ்சியத்தை நடத்திச் செல்வதற்கு தேவையான அனுமதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளதாக நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.
இதற்கமைய அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று 8 பேர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகவும் நீதியரசர்கள் குழாம் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.