இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். .
இதற்கமைவாக இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாளொன்றில் கொரோனா தொற்றினால் அதிகளவானோர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுள் 24 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்களாகவுள்ளதுடன், 10 பேர் 61 மற்றும், 70 வயதுக்கு இடைப்பட்டவர்களாகும்.
லுணுகலை, பலாங்கொடை, கட்டுநாயக்க, பாதுருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓய, பண்டாரகொஸ்வத்த, பொரளை, பாதெனிய, கல்கமுவ, எதனவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், யட்டியாந்தோட்டை, பெலிஹல்ஓய, நேபொட, கலபிட்டமட, நிகவரெட்டிய, வரகாபொல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், அம்பிட்டிய, மாரசன்ன, ரஜவெல, உடிஸ்பத்துவ, ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் மரணங்களுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.